இதெப்படி சாத்தியம்.? மண்டைய குழப்பும் அசாத்தியமான மர்மங்கள்.! சில கேள்விகளுக்கு விடைகள் கிடையாது - அதை குழப்பம் என்று கூறலாம். இங்கு சில விடைகளும் உள்ளன, ஆனால் அதற்கான கேள்விகள் கிடையாது - அதைத்தான் மர்மம் என்று கூறுவார்கள். தொல்பொருளியல் என்பது நமது கடந்த காலங்களின் மீதான வெளிச்சத்தை பாய்ச்ச உதவும் மிக முக்கியமான ஆய்வுகளில் ஒன்றாகும். ஆனால் அந்த கடந்த காலம் நிகழ்காலத்தை விஞ்சும் அளவிலான புதிராக இருந்தால், இதை ஏன் தான் கண்டுபிடித்தோமோ என்று வருந்தும் நிலை ஏற்படத்தான் செய்கிறது. அப்படியாக நவீன விஞ்ஞானிகளின் மண்டையை போட்டு குடையும் மிகவும் புதிர்மிக்க தொல்லியல் கண்டுபிடிப்புகளைப்பற்றி தான் இந்த தொகுப்பில் காணவுள்ளோம். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! வெண்டிங் மெஷின் (கி.மு. 100) நவீன கால விற்பனை இயந்திரங்கள் போன்ற வடிவமைப்பிலான ஒரு பண்டைய இயந்திரம் கோவில்களில் புனித நீரை விற்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹீரோ ஆப் அலெக்ஸாண்ட்ரியாவால் கண்டுபிடிக்கப்பட்ட இயக்கருவி ஒரு முன்னோடி சாதனம் என்பதில் சந்தேகமேயில்லை. ...